Choose Color

+91 8124408794

+91 7550100920

தமிழ் பாடத்திட்டம்

அலகு 1 :


சங்க இலக்கியங்கள்

பாட்டும் தொகையும் - தொல்காப்பிய அகம் - புறம் கோட்பாடுகள் - சங்க இலக்கியங்கள் திணை நிலை இலக்கியங்கள் - அகக் கோட்பாடுகள் - புறக் கோட்பாடுகள் - பண்பாட்டு நாகரிகச் சிறப்புகள் - இலக்கியச் சிறப்புகள் - வரலாற்றுக் குறிப்புகள் - இயற்கைப் புனைவு - அறக் கருத்துகள் - வாழ்வியல் நாடகப் பாங்கு - பழக்க வழக்கங்கள் - புலவரும் புரவலரும் - விழுமியங்கள் - ஆற்றுப்படை இலக்கியங்கள் - பொற்காலம் - தமிழின் செம்மொழித் தகுதிக்குச் சங்க இலக்கியப் பங்களிப்பு.


அலகு 2 :


அற இலக்கியங்கள்

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் அற இலக்கியங்கள் - தோற்றப் பின்னணி - திருக்குறளின் தனித் தன்மைகள் - திருக்குறள் நாலடியார் ஒப்பீடு – பிந்தைய அற இலக்கியங்களில் திருக்குறளின் தாக்கம் - பிற்கால அற இலக்கியங்கள் - சதகங்கள் ஒளவையார் நூல்கள் - நீதி நெறி விளக்கம் - வேதநாயகரின் நூல்கள் - ஆத்தி சூடிகள் - ஔவையார் - பாரதியார்.


அலகு 3 :


காப்பியங்கள்

பெருங்காப்பியங்கள் - சிறு காப்பியங்கள் - வரையறை - இரட்டைக் காப்பியங்கள் - சீவக சிந்தாமணி – கம்பராமாயணம் - பெரியபுராணம் - பெருங்கதை - சீறாப் புராணம் - தேம்பாவணி - உதயணகுமார காவியம்- நாககுமார காவியம் - யசோதர காவியம் - சூளாமணி - நீலகேசி - இக்காலக் காப்பியங்கள் : பாஞ்சாலி சபதம் - அவனும் அவளும் - ஆசியஜோதி - பாண்டியன் பரிசு - மாங்கனி.அலகு 4 :


சமய இலக்கியங்கள்

பக்தி இயக்கம் - பக்தி இலக்கியங்கள் - ஆழ்வார்கள் – நாயன்மார்கள் – சித்தர்கள் - சமண இலக்கியங்கள் - பௌத்த இலக்கியங்கள் - குமர குருபரர் - பட்டினத்தார் - அருணகிரிநாதர் - தாயுமானவர் - வள்ளலார் - இசுலாமிய இலக்கியங்கள் - கிறித்தவ இலக்கியங்கள்.


அலகு 5 :


இலக்கணங்களும் உரைகளும்

இலக்கணப் பொருட் பாகுபாடு : எழுத்து - சொல் - பொருள் - யாப்பு - அணி - பாட்டு - தொல்காப்பியம் - நன்னூல் - புறப்பொருள் வெண்பாமாலை - நம்பியகப் பொருள் - யாப்பருங்கலக் காரிகை - தண்டியலங்காரம் - பன்னிரு பாட்டியல் - பிற இலக்கண நுால்கள்.


உரைகள் : இறையனார் களவியல் - இளம்பூரணர் – பேராசிரியர் - சேனாவரையர் - தெய்வச் சிலையார் நச்சினார்க்கினியர் - மயிலைநாதர் - பரிமேலழகர் - சிவஞான முனிவர் - ஆறுமுக நாவலர்.


அலகு 6 :


சிற்றிலக்கியங்கள்

வகைப்பாடு – கோவை : திருக்கோவையார் - பரணி: கலிங்கத்துப்பரணி - பிள்ளைத் தமிழ் :மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் - தூது: தமிழ் விடு தூது - பள்ளு: முக்கூடற் பள்ளு - குறவஞ்சி: திருக்குற்றாலக் குறவஞ்சி - கலம்பகம் : நந்திக் கலம்பகம் - உலா : மூவருலா.


அலகு 7 :


இக்கால இலக்கியங்கள்

கவிதை: மரபுக் கவிதை: பாரதியார் - கவிமணி நாமக்கல்லார் – பாரதிதாசன் - கண்ணதாசன் – சுரதா


புதுக்கவிதை: ந. பிச்சமூர்த்தி - நா. காமராசன் - மீரா - அப்துல் ரகுமான் - சிற்பி - மு. மேத்தா – வைரமுத்து – ஐக்கூ - சென்ரியூ - லிமரிக் – லிமரைக்கூ: தமிழன்பன்


புதினம்: மாயூரம் வேதநாயகம் பிள்ளை - கல்கி - ஆர். சண்முக சுந்தரம் – மு. வரதராசன் - தி. ஜானகிராமன் - ராஜம் கிருஷ்ணன் - சுந்தர ராமசாமி - கி. ராஜநாராயணன் - சிவகாமி - இமயம்


சிறுகதை: வ.வே.சு. அய்யர் - புதுமைப்பித்தன் - கு.ப. இராஜகோபாலன் - கு. அழகிரிசாமி - ஜெயகாந்தன் – அசோகமித்திரன் - வண்ணதாசன் - மேலாண்மை பொன்னுசாமி – அம்பை.


நாடகம்: மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை - சங்கரதாஸ் சுவாமிகள் - பம்மல் சம்பந்த முதலியார் - ஆ. பழனி - அண்ணா - பி.எஸ். இராமையா கலைஞர் மு. கருணாநிதி - இந்திரா பார்த்தசாரதி - ந. முத்துசாமி - சே. இராமானுஜம் - மு. இராமசாமி - இன்குலாப்.


பயணம்: ஏ.கே. செட்டியார் - சோமலெ - சி. சுப்பிரமணியம் - மணியன்


கட்டுரை: மறைமலையடிகள் - வ.ரா. - திரு. வி.க. - ரா.பி.சேதுப்பிள்ளை - மயிலை சீனி. வேங்கடசாமி - வெ. சாமிநாத சர்மா - வா.செ. குழந்தைசாமி


வாழ்க்கை வரலாறு: மகாகவி பாரதியார் (வ.ரா.) - புதுமைப்பித்தன் வரலாறு (ரகுநாதன்) - பொன்னியின் செல்வன் (சுந்தா) - இராமானுசர் வரலாறு (சிற்பி) - குன்றக்குடி அடிகளார் (பொன்னீலன்)


தன் வரலாறு: வ.உ.சி. - உ.வே.சா - திரு.வி.க. - நாமக்கல் கவிஞர் - நெ.து. சுந்தரவடிவேலு - அப்துல் கலாம்


அலகு 8 :


நாட்டுப்புற இலக்கியங்கள்

வகைப்பாடு - தாலாட்டு - ஒப்பாரி தொழிற் பாடல்கள் கதைப் பாடல்கள் கதைகள் பழமொழிகள் விடுகதைகள் நம்பிக்கைகள் - கற்பனை - நயம் - உளவியல் - வாழ்வியல் - பழக்க வழக்கங்கள் - பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியதன் இன்றியமையாமை.


அலகு 9 :


தமிழர் கலைகளும் பண்பாடும்

கலை - பண்பாடு - விளக்கம் – இசை - ஆடல் – ஓவியம் – சிற்பம் - கட்டடம் – நாட்டுப் புறக் கலைகள் - பழக்க வழக்கங்கள் - நம்பிக்கைகள் - விழாக்கள் - விளையாட்டுகள் - வழிபாட்டு நெறிகள்


அலகு 10 :


இலக்கியத் திறனாய்வியல்

இலக்கியப் படைப்பும் படைப்பாளியும் – இலக்கிய வகைமைக் கோட்பாடுகள் - இலக்கிய உருவம் - உள்ளடக்கம் - உத்தி - திறனாய்வு அணுகுமுறைகள் - இலக்கியக் கொள்கைகள் - பெண்ணியம் – தலித்தியம்


ஆ. முத்து சிவன் - எஸ். வையாபுரிப் பிள்ளை - தெ.பொ.மீ. - மு.வ. -அ.ச.ஞானசம்பந்தன் - நா. வானமாமலை - க.கைலாசபதி - கா. சிவத்தம்பி க.நா. சுப்பிரமணியன் - சி.சு. செல்லப்பா - வ.சுப. மாணிக்கம் - இவர்களது திறனாய்வுகள்.


அலகு 11 :


மொழி பெயர்ப்பிலக்கியங்கள்

தமிழிலிருந்து பிற மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் – ஏ.கே. இராமானுஜன் - கா.செல்லப்பன் இவர்களது மொழி பெயர்ப்புப் பணிகள்


பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் - சுத்தானந்த பாரதி - கா. ஸ்ரீ.ஸ்ரீ. - த.நா. குமாரசாமி - சி.ஏ. பாலன் - சரஸ்வதி ராம்நாத் -


தி.ப. சித்தலிங்கையா - மு.கு. ஜகந்நாத ராஜா- இவர்களது மொழி பெயர்ப்புப் பணிகள்.


ஆங்கிலம் முதலிய உலக மொழிகளிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் - சேக்சுபியர் - மில்டன் - கார்க்கி.


அலகு 12 :


மக்கள் தொடர்பியல் ஊடகங்கள்

அச்சு ஊடகங்கள் : இதழ்கள் - நாள் – வார – திங்கள் – பருவ இதழ்கள் தோற்றம் - வளர்ச்சி.


மின் ஊடகங்கள் : வானொலி இதழ்கள் - வளர்ச்சி திரைப்படம் தொலைக்காட்சி கணினி.


தோற்றம் வளர்ச்சி ணையம் இணைய


ஊடகங்களும் தமிழ் வளர்ச்சியும் - விளம்பரங்களும் தமிழ் வளர்ச்சியும், கலைச் சொல்லாக்கம் புதிய சொல்லாக்கம் - கருத்துப் பரப்பல் முறை